அவாஸ்ட் - கணினி பாதுகாப்பு - இலவச ஆண்டி வைரஸ் மென்பொருட்கள் - 5

22/10/2011 14:16
 



அவாஸ்ட்

பணம் கொடுத்து வாங்கப்படும் சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விடவும் சிறப்பாக இயங்குகிறது இந்த இலவச மென்பொருள் நாளுக்கு நாள் இதன் பாவனையாளர்கள் அதிகரித்துச் செல்வதற்கு இதுவே காராணம். அவாஸ்ட்டை தரவிறக்கி நிறுவியதும் மின்னஞ்சல் பெயர் தந்து ரெயிஸ்டர் செய்தால் ஒரு வருடத்திற்குரிய இலவச லைசென்ஸ் தருகிறார்கள்.

https://forum.avast.com/index.php

என்ற இணைப்பில் உங்கள் கணினியில் ஏற்படும் வைரஸ் பிரச்சனைகளைப் பற்றிய சந்தேகங்களை ஆங்கிலத்தில் கேட்டு அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர், ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.

மற்றும் புதிய வசதியாக autosandbox வசதியைக்கூறலாம் இதன் மூலம் வைரஸ் பாதித்த(supsious) பைல்களை நம் கணினிக்கு எந்த இடையூறுமின்றி இயக்கலாம்.

ஒரு மென்பொருள் அல்லது பைலினால் என் கணினிக்கு பாதுகாப்பு கெடலாம் என நீங்கள் அறிந்திருந்தால் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.

இதில் Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது. யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய புள்ளிவிவரங்களை
தருகிறது.

டவுண்லோட் செய்வதற்கு - https://www.avast.com/free-antivirus-download

ஏனைய இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விட தாங்களே சிறந்தவர்கள் என்கிறார்கள்.

ஒப்பிட்டு பார்க்க இணைப்பு - https://www.avast.com/best-antivirus


அவாஸ்ட் பற்றி ஏனைய இணைய எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என அறிய விரும்புபவர்கள் இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.
நீங்கள் ஏற்கனவே அவாஸ்ட் பாவிப்பவராக இருந்தால் இந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.அல்லது உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை இப்பக்கத்தில் இறுதிக்குச் சென்று தெரியப்படுத்துங்கள். அவை மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

—————

Back


comment

No comments found.


Categories


Contact

Innoviz

professional group of institution
palladam-641663