முக்கியமான செய்திகளை ரகசியமாக பரிமாறிக்கொள்ள ! !

31/10/2011 17:16

இப்பொழுது இணையத்தின் ஆதிக்கம் தான் நடக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நாம் இப்பொழுது இணையத்தில் தான் பகிர்ந்து கொள்கிறோம். நண்பர்களிடம் தொடங்கி நம் முதலாளி வரைக்கும் நாம் அனைவரும் இணையத்தை தான் பயன்படுத்துகிறோம். அதைப்போல் இணையத்தில் தகவல்கள் திருடபடுவதும் ரொம்பவே சாதாரணமாக நடக்கிறது. நாம் ஒருவரிடம் பகிரும் தகவலை மிகவும் எளிதாக ஹச்கேர்ஸ் எடுத்துவிடுகிரர்கள்.இதனை தடுக்க பல வழிகள் வந்துவிட்டது. அது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

இதற்க்கு ஒரு இணையதளம் நமக்கு மிகவும் உதவுகிறது. இந்த தளம் மூலம் நாம் நம் செய்தியை ஒரு குறிப்பிட்ட கடவுச்சொல் கொடுத்து மாற்றிவிடலாம். அதனை நீங்கள் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ பரிமாறிக் கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் அந்த தளத்திற்கு சென்று நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை கொடுத்து நீங்கள் அணுப்பிய தகவலை பார்க்கலாம்.

இந்த தளத்திற்கு செல்ல : Encipher It


செய்தியை என்கிரிபட் செய்ய :


  • மேலே உள்ள தளத்திற்கு செல்லுங்கள் பின்னர் அதில் இருக்கும் இணைப்பை இழுத்து உங்கள் உலாவியின் BOOKMARK TOOLBAR-இல் போடுங்கள் 
  • பின்னர் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் இருந்தோ அல்லது வேறு இடங்களில் இருந்தோ இதனை மிக எளிதாக இயக்கலாம்.
 
  • உங்களுக்கு இது எப்பொழுது தேவையோ அப்பொழுது உங்கள் செய்தியை தட்டாசு செய்துவிட்டு  BOOKMARK TOOLBAR-இல் கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு ஒரு விண்டோ வரும் அதில் உங்கள் கடவுச்சொல்லை தட்டாசு செய்து ENCRYPT என்ற பொத்தானை அழுத்துங்கள்.
  • உங்கள் செய்தி வேறொரு வடிவில் உங்களுக்கு கிடைக்கும் அதனை நீங்கள் யாருக்கு அனுப்பவேண்டுமோ அனுப்புங்கள்.
  • ஆனால் நீங்கள் அணுப்பிய செய்தியை படிக்க அவர்களுக்கு உங்கள் கடவுச்சொல் தெரிய வேண்டும்.
  • DECRYPT செய்வதும் ENCRYPT செய்வதுபோல் தான் செய்ய வேண்டும்.
 

 
உங்கள் செய்திகளை மிகவும் பாதுகாப்பாக பரிமாறிக் கொள்ளுங்கள்.

 

—————

Back


Categories


Contact

Innoviz

professional group of institution
palladam-641663



Make a website for free Webnode