இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நம் நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.
இதில் நீங்கள் எந்த வகையான வீடியோவையும் பார்க்கலாம் இதில் இல்லாத வீடியோவே கிடையாது என்று குறலாம். அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வீடியோ சிலவற்றிற்கு ஆடியோவை தேடினாலும் கிடைக்காது. அந்த மாதிரியான நேரங்களில் இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன் .
சில தளங்கள் மூலம் நாம் யூடியுப்பின் வீடியோவை ஆடியோவாக மாற்றலாம் அதைப்போல தான் இந்த தளமும் ஆனால் இந்த தளம் சற்றுவேகமாகவே செயல்படுகிறது. யூடியுப் வீடியோக்களை மிகஎளிதாக இந்த தளம் மூலம் ஆடியோவாக மாற்றிவிடலாம்.
வீடியோவை ஆடியோவாக மாற்ற :
—————