உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண்டோஸ் 8-இன் சோதனை பதிப்பை இப்பொழுது தான் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்ப்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது.இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. அதில் உள்ள ஒரு சிறப்பான வசதியை பற்றி பார்ப்போம்.
விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணினியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கம்ப்யூட்டர் சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ளலாம்.
இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும் பதித்து ( SCREEN SHOT ) வைக்கிறது அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது. இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்திர்கள் என்பதை மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.
இதனை திறப்பதற்கு :
இதனை பயன்படுத்த :
இந்த மென்பொருள் உங்கள் ஸ்க்ரீன்கலை பதிந்து MHTML கோப்பாக மாற்றிவைக்கும் அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப் பட்டிருக்கும்.
—————