VLC மூலம் வீடியோக்களின் வடிவத்தை மாற்ற ( CONVERTING VIDEOS)

31/10/2011 17:39

VLC MEDIA PLAYER-ஐ பற்றி தெரியாதவர்கள் இருக்க இயலாது அந்த அளவுக்கு இந்த பிளேயர் புலமை பெற்றுவிட்டது. இதன் மூலம் நாம் எந்த வடிவமுள்ள கோப்பினையும் பார்வையிடலாம் இது தான் இதன் மிகப்பெரிய அனுகூலமாகும். இதனாலே இந்த மென்பொருளை அனைவரும் விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல இதில் ஏராளமான பயன்பாடுகளும் உள்ளது இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

நம்மில் பலர் வீடியோவின் வடிவத்தை மாற்றுவதை ஒரு வேலையாகவே செய்வோம். அதன் வடிவத்தை ஒவ்வொரு கைபேசிக்கும் ஏற்றவாறு அல்லது அதனை ஆடியோ கோப்பாகவோ மாற்றுவோம். இதற்காக பல வகையான கோப்புகளையும் நிறுவி வைத்திருப்போம். ஆனால் அந்த வேலைகளை VLC யின் மூலமாகவும் நாம் பார்க்கலாம் அது பற்றி பார்ப்போம்.

VLC யின் மூலம் வீடியோ கோப்பின் வடிவத்தை நாம் மிகவும் எளிதாக மாற்றலாம்.

அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது :




 
  • முதலில் VLC-ஐ திறந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் அதில் MEDIA  >  CONVERT/SAVE என்பதை அழுத்துங்கள் அல்லது CTRL + R அழுத்துங்கள் 
 

 
  • பின்னர் கோப்பினை ADD பொத்தானை அழுத்தி தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • பின்னர் கீழே உள்ள CONVERT/SAVE அருகில் உள்ள முக்கோண பொத்தானை அழுத்தி CONVERT என்பதை தேர்வு செய்யுங்கள்.
 
 
 
  • ஒரு புது விண்டா திறக்கும் அதில் DESTINATION FOLDER என்பதில் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
  • அதன் கீழே உள்ள PROFILE என்பதில் வடிவத்தை தேர்வு செய்து CONVERT ஐ அழுத்துங்கள் 
 
இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வீடியோவை ஆடியோவாக கூட மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

—————

Back


Categories


Contact

Innoviz

professional group of institution
palladam-641663



Make a website for free Webnode